Sunday 27 March 2016

பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்

பிரான்சில் ‘மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறைநுணுக்கச் சாதனையாக உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறித்துறை நுணுக்கங்களின் மகத்தான வல்லமையை அது எடுத்துக் காட்டுகிறது.  அங்கே கட்டப்பட்டு, பிரென்ச் மக்கள் மெய்யாகப் பெருமைப்படும் அந்த மகத்தான சாதனை பிரான்சின் தீரச்செயலைப் பறைசாற்றுகிறது. நவீன வெற்றிமயமான பிரான்ஸ் தேசம், எதிர்காலத்துக்காகத் தன்னை இணைத்துக் கொள்ளும் ஓர் பங்கெடுப்புத் திட்டம், இது ‘. பிரென்ச் அதிபதி: ஜாக்ஸ் செராக் (President: Jacques Chirac)


Long bride -9 

‘மனிதனின் படைப்பு வினைகள் இயற்கை வனப்புக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். வீதிப் பாலத்தை வானவெளியில் தூக்கி நிற்கும் தூண்கள் பூமியில் ஏறக்குறைய இயற்கையாக வளர்ந்தவை போல எழுந்து, சூழ்வெளி வனாந்திர எழிலில் தோற்றம் அளிக்க வேண்டும். பொலிவுடன் காட்சி தரும் பள்ளத்தாக்குடன், பாலம் ஒட்டுத் தையல் போட்டதுபோல் தெரியக் கூடாது. பசுமையான வனச்சரிவுகள் பரந்த வெளியில் பட்டாம்பூச்சி மென்மையாக எழுவது போல் பாலம் காணப்பட வேண்டும் ‘.

‘நமது நாகரீக யுகத்தில் பின்னணித் துணைத்துறை [Infrastructure] அமைப்பு ஒரு நாட்டுக்கு வேண்டிய அடிப்படை. பொதுவெளித் தளங்கள், நதிகள் மீது கட்டும் பாலங்கள், வீதிகள் ஆகியவைதான் மக்களை ஒருங்கிணைத்துச் சேர்க்கின்றன. மேலும் நமது வாழ்க்கைத் தரத்தை அவை செம்மைப் படுத்துகின்றன. ஆனால் ஒருவர் அளந்தறிய முடியாத மிக்க ஆன்மீக உணர்வும், நமது தேவைகளில் ஒன்றாய் அவற்றுடன் இருக்கின்றது. ‘

Long bride -7 

‘பாலம் மீது ஒருவர் வாகனத்தில் கடந்து செல்லும் போது, அவரது உள்ளத்தையும் பாலம் உயரச் செய்ய வேண்டும். கம்பீரமான பாலத்தைப் பார்க்கும் அவரது நெஞ்சில் ஓர் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். மில்லா நகர் வழியே வாகனப் பயணங்களைத் தவிர்த்து அதைப் பாழாக்காமல், வான்வீதிப் பாலம் மாந்தருக்குக் கடந்து செல்ல வேறு பாதை அளிப்பதுடன், அதைத் தாண்டி மனப் பூரிப்பையும் மிகையாய்த் தருகிறது.’ பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலைநிபுணர்: நார்மன் ஃபாஸ்டெர் (British Architect: Norman Foster)

Long bride -5 

பொறிநுணுக்கமும் கலைத்துவமும் கலந்த வான்வீதிப் பாலம்

உலகப் பெருவிந்தைப் படைப்புகளில் முன்னணியில் நிற்கும் பாரிஸ் ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower], அமெரிக்காவின் சுதந்திரச் சிலை [Statue of Liberty] ஆகியவற்றை ஆக்கிய பிரான்ஸ் தேசம், மற்றுமொரு மகத்தான பொறியியற் சாதனையாக மிக்க உயரத்தில் ஒரு நீண்ட வான்வீதிப் பாலத்தைத் தனது 21 ஆவது நூற்றாண்டுப் படைப்பாக அமைத்து, உலகிலே ஓர் பரபரப்பை உண்டாக்கி யுள்ளது! தீக்குச்சி களில் நூலைக் கட்டித் தொங்கவிட்ட தொட்டில் போல் எளிதாகத் தோன்றுகிறது, பிரான்சின் பிரம்மாண்டமான இரும்புவடம் தூக்கிய புது யுகப் பாலம் [Cable-Stayed Modern Bridge]! கண்கொள்ளாக் காட்சியாய்க் கவரும், பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லைப் பகுதியில் டார்ன் நதிப் பள்ளத்தாக்கில் (Tarn River Valley), உயர்ந்த மலைச் சரிவுகளில் தெரிந்தும், தெரியாமால், சூழ்வெளிப் பொலிவைச் சிறிதும் குன்றச் செய்யாது அற்புதமாக ஆக்கப் பட்டிருக்கிறது, பிரான்சின் இரும்புவடத் தொங்கு பாலம்!



ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் [2460 மீடர்] நீளமான வான்வீதிப் பாலம், பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிஃப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி [270 மீடர்] உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது! இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு, 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது! ஏழு தீக்குச்சிக் கம்பங்களில், எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி [343 மீடர்] உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது, ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே!



மெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலை நிபுணர் நார்மன் ஃபாஸ்டர். ரைஸ்ஸ்டாக் [Reichstag] என்னும் ஜெர்மன் பாராளுமன்றத்தைப் பெர்லினில் டிசைன் செய்த கட்டிட நிபுணர், நார்மன் ஃபாஸ்டர். பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரை, ஸ்பெயின் நாட்டு எல்லையுடன் இணைக்கும் பாதையில் (A75) இப்புது வீதி, ரோன் நதி தீரத்தில் [Rhone River Valley] கோடை கால மோட்டர் வாகனங்களின் பயண நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்டது. ‘மலைச் சரிவுப் பள்ளத்தாக்கில் கண்ணுக்குப் பட்டும், படாமல் மெலிந்த சிற்பக் கோடுகள் போல் தோற்றம் அளிக்கிறது, பிரான்சின் புதுப்பாலம். இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள நடை மொழியைப் பேசுகிறது இந்தப் பாலம். மிகச் சிறிய இடத்தை அடைத்துக் கொண்டு, மலைச் சரிவு தீரத்தில் இயற்கையுடன் பொருந்தி நடமிடும், இந்தப் பாலத்தின் கட்டமைப்புப் பொலிவு எங்களைக் கவர்கிறது! ‘ என்று ஃபாஸ்டர் கூறினார்.


பிரான்சின் மில்லா வான்வீதி, ஜப்பான் கடல்மீது கட்டியுள்ள நீண்ட தொங்கு பாலம் ஆகாஷி கைகோவை விட [Akashi Kaiko, Japan] சற்று நீளமானது. மேலும் மில்லாவின் கூம்பிய தூண்கள் ஆகாஷி ைகைகோ கோபுரங்களை விட மிக்க உயரத்தைக் கொண்டவை. ஆனால் அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸ் நதிமேல் [Arkansas River] 1067 அடி (320 மீடர்) உயரத்தில் இருக்கும் கொலராடோ ராயல் கார்ஜி பாலத்தை விடச் [Colorado Royal Gorge Bridge] உயரத்தில் சிறியது, மில்லா வான்வீதி. ஆனால் இரும்பு உத்தரச் சட்டத்தின் மேல் மரப்பலகைகளால் கட்டப்பட்ட ராயல் கார்ஜி பாலம் மனிதர் மட்டும் செல்லும் நடைபாலமே [Pedestrian Bridge] தவிர, பிரான்ஸ் மில்லா பாலம் போன்று மோட்டர் வாகனங்கள் பயணம் செய்யத் தகுதியும், வலுவும் அற்றது! ஆகவே மோட்டர் வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏற்ப பேருயர்ச்சியில் கட்டப்பட்ட உலகப் பெரும் பாலம், பிரான்சின் மில்லா வான்வீதி என்பதை அழுத்தமாகச் சொல்லலாம். ஈரோப்பின் [2004] நாணய மதிப்பில் E.394 மில்லியன் ஈரோ [523 மில்லியன் US டாலர்] செலவில் கட்டி முடிக்கப்பட்ட வான்வீதிப் பாலத்தை 2004 டிசம்பர் 14 ஆம் தேதி பிரென்ச் அதிபதி ஜாக்ஸ் செராக் கோலாகல மோடு திறந்து வைத்தார்.



வான்வீதிப் பாலத்தின் கட்டுமான விளக்கங்கள்

மில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், வேனிற் காலச் சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக் ‘கடப்புக் கட்டணம் ‘ (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக் குரிய சட்டங்கள் யாவும் சுமார் 36,000 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. பூமிக்குமேல் 1.6 மைல் நீளமுள்ள பாதைத் தட்டைப் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி!


வான்வீதிப் பாலத்தின் நீளம்: 8200 அடி (2460 மீடர்). அகலம்: 106 அடி (32 மீடர்). பாலத்தின் தடிப்பு: 14 அடி (4.2 மீடர்). இரட்டைப் பாதைகளை இருதிசைகளிலும் அமைக்கப்பட்டுப் பாலம், ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் இணையாகச் செல்லும் வசதி படைத்தது. ஏழு கூம்பிய தூண்களின் [Piers] இடையில் அமைப்பான ஆறு இடையகற்சித் தட்டுகள் [Span Plates] ஒவ்வொன்றும் 1140 அடி (342 மீடர்). முதல்-இறுதித் தூண்களின் புறத்தே உள்ள தட்டின் நீளம்: 680 அடி (204 மீடர்). ஏழு தூண்கள் 253 அடி முதல் 807 அடி வரை உயரங்கள் (77 மீ-246 மீ) கொண்டு அடித்தளம் 81 அடி (24.5 மீ) அகலமும், பாலத் தட்டு அரங்கில் 36 அடி (11 மீ) அகண்டும், உச்சியில் ஒடுங்கியும் உள்ளன. தூண் ஒன்றின் மேல் 319 அடி (97 மீடர்) கோபுரம் [Pylon] நிற்கிறது. ஒவ்வொரு தூணும் 16 இணைப்புச் சட்டங்களால் சேர்க்கப்பட்டு, 2230 மெட்ரிக் டன் எடை கொண்டது. தூண்கள் ஒவ்வொன்றின் இருபுறத்திலும் 154 முறுக்கப்பட்ட இரும்பு வடங்கள் [Twisted Steel Cables] பூட்டப்பட்டு, மனிதக் கரங்கள் போல் பாலத்தின் இடைத்தட்டு எடையைத் தூக்கி, தட்டின் மட்டநிலை [Horizontal Level] உயரத்தைச் சீராகச் சமநிலையில் நிறுத்துகின்றன. முறுக்கிய இரும்பு நாண்களின் மொத்த எடை: 5000 டன்.

2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி: எஃப்பியாஜ் [Effiage]. அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (36,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம்! வீதிக்குப் பயன்பட்டுள்ள காங்கிரீடின் கொள்ளளவு: 85,000 கியூபிக் மீடர். பாலவீதி அமைத்துள்ள பிரான்சின் மோட்டர் வாகன வீதி: A75 (Autoroute). 1140 அடி நீளம், 14 அடி தடிப்புள்ள காங்கிரீட் தட்டுகள், 60 டன் எடையுள்ள 13 அடிX57 அடி [4 மீடர்X17 மீடர்] துண்டுகளால் தனித்தனியாகச் சேர்க்கப்பட்டுப் பிறகு ஒவ்வொரு தட்டும், பூமியின் துணைக்கோள் மூலம் கண்காணிக்கப் பட்டு ஆயில் அழுத்த துடுப்புகளால் [Satellite-guided Hydraulic Rams], ஒவ்வொரு கனமான தட்டும், தூண்களின் மேல் மெதுவாக [நிமிடத்துக்கு 6 அங்குல] நகர்ச்சி வீதம் சீராகத் தள்ளப்பட்டு நேராக்கப் பட்டது.

வான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு

1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது.

Long bride -4

1989 பூகம்பத்தில் பழுதடைந்த அமெரிக்காவின் ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா தொங்கு பாலம் [Bay Bridge] 2004 இல் செப்பனிட அல்லது வேறிடத்தில் புதிதாய்க் கட்டத் தீர்மானமாகி, இப்போது மதிப்பீடைத் தாண்டிப் பல பில்லியன் டாலருக்கும் மேலோடி விட்டது. காலிஃபோர்னியா ஆளுநர் ஆர்நால்டு சுவார்ஸ்நெக்கர் [Arnold Schwarzeneggar], வளைகுடாப் பாலத்தில் டிசைன் மாறுதல் அமைக்கச் செய்து, நிதிச் செலவு குறையுமா வென்று ஆராய நிபுணர்களை ஏற்பாடு செய்தார். ஆனால் புதுப்பாலம் அமைப்புத் திட்டம் தீர்மானமாகத் தாமதமாகிக் கொண்டு வருவதால், தற்போது வளைகுடா பால அமைப்பு நிதி மதிப்பீடு [5200 பில்லியன்], பிரான்சின் வான்வீதிப் பாலச் செலவைப் போல் பத்து மடங்காகி விட்டது! பிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது, மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே!

Long bride 


 https://www.youtube.com/watch?v=NcXaIfR8LZ8

உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றதா?

உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றதா, என்ற நீண்ட நாள் கேள்விக்கு தற்சமயம் பதில் கிடைத்திருக்கின்றது. ஏலியன்கள் உண்மையில் உலகில் வாழ்ந்து வருவதாக யுஎஃப்ஓ சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகின்றது. இது குறித்த விரிவான தகவல்கள்

wTSWf0u.jpg

ஏலியன் வகை

பிலெய்டன் என அழைக்கப்படும் ஏலியன்கள் வடமேற்கு அர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யுஎஃப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

AsLstAI.jpg

பிரிவு

சால்டா பகுதியின் செய்திகளில் அர்ஜென்டினாவில் மொத்தம் 30 பிரிவினர் இருப்பதாகவும் அவர்கள் தங்களது பரிணாம வட்டத்தின் இறுதியை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

wKRZnmR.jpg

சாத்தியம்

பிலெய்டன் பேஸ் காச்சி, லா போமா, ரூட் 40 இடையே இருக்கலாம் என்றும், இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

8CcvD4E.jpg

மறைவு

இதன் முக்கிய தளமானது வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aJ4beUy.jpg

கருத்து

இது குறித்து ஸ்காட் வாரிங் கூறும் போது, பிலெய்டன்கள் நார்டிக் ஏலியன் என கூறப்படுவதாகவும், இவை பார்க்க மனிதர்களை போன்றிருக்கும் ஏலியன்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

bjr4l0W.jpg

பாதுகாப்பு

இவ்வகை ஏலியன்கள் உலகம் மற்றும் நமது எதிர்காலத்தில் அதிக அக்கறை கொண்டிரு

Mdkz3O6.jpg

நம்பிக்கை

ஸ்கான்டிநாவியன் மற்றும் கருப்பு தோல் கொண்ட பிலெய்டன்கள் உயரகமாகவும், ஒல்லியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

W7RR4s4.jpg

பால் வழி

பால் வழியின் வெளியே இருக்கும் லைரா எனும் கிரகத்தில் இருந்து பிலெய்டன்கள் இறங்கி வந்திருப்பதாக யுஎஃப்ஓ நிபுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும் புகைப்படம் எடுக்க தெரியவில்லையா இதோ உங்களுக்கான டிப்ஸ்.

இன்றைய ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசிய அம்சங்களில் முதன்மையாக இருப்பது கேமரா என்றே கூறலாம். ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் முதலில் கேட்பது போனில் நல்ல கேமரா இருக்கின்றதா என்பதாகவே இருக்கின்றது.

அவ்வாறு நீங்களும் நல்ல ஸ்மார்ட்போனினை வாங்கி விட்டீர்களா. அதிக எம்பி கொண்ட கேமரா இருந்த போதும் தரமான புகைப்படம் எடுக்க தெரியவில்லையா. கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான டிப்ஸ். 

oBhMTUr.jpg

டிஜிட்டல் zoomஐ தவிர்க்கவும்

இப்படி செய்வதால் போட்டோவை பெரிதுபடுத்த முடியுமே தவிர துல்லியமான படத்தை எடுக்க முடியாது. இப்படி டிஜிட்டல் zoom செய்வதால் புகைப்படம் தெளிவாக இருக்காது. ஆகவே zoom out மோடில் படத்தை எடுத்து எடிட் செய்து கொள்ளவும். 

HSrqPFU.jpg

ப்ளாஷ் தேவையில்லை

ப்ளாஷ் கொடுப்பதால் படம் தெளிவாக தெரியாது தவிர துல்லியமாகவும் இருக்காது. உங்கள் புகைப்படம் ஆழமாக இருக்க வேண்டுமென்றால் ப்ளாஷ் அம்சத்தை தவிர்த்து இயல்பான வெளிச்சத்தை கொடுத்து எடுக்கவும். ஆனால் இருட்டான அறையில் இருந்தால் ப்ளாஷ் அம்சத்தை பயன்படுத்தலாம். அப்பொழுது மிக அருகில் வைத்து படம் எடுக்காமல் தூரத்தில் வைத்து எடுத்தால் நல்லது. 

E2YUJxZ.jpg

Rule of Thirds

போட்டோ எடுப்பதில் தெளிவு இல்லாமல் இருப்பவர்கள்தான் பொருளை நடுவில் வைப்பவர். ஆனால் அதில் தெளிவு இருப்பவர்கள் எங்கு வைத்தால் அது அழகாக இருக்கும் என்பதை நன்கு அறிவர். Rule of thirds frameஐ மூன்று பகுதிகளாக பிரிக்கின்றது. அது கிடைமட்டம் மற்றும் செங்குத்தாக பிரிக்கின்றது. ஆகவே இதன் கோடுகளில் போட்டோவை பொருத்தினால் போட்டோ நன்றாக இருக்கும்.

9DHGjVD.jpg

லைட்டிங் & போக்கஸ்

முதலில் வெளிச்சம் எங்கு இருக்கின்றது என்பதை பார்த்து படத்தை ஃபோகஸ் செய்யவும். எடுத்துக்காட்டாக, வெளிச்சம் வரும் திசையில் வைக்க வேண்டும். சில நேரத்தில் இயல்பான மற்றும் போலியான வெளிச்சத்தை பயன்படுத்தி படத்தை எடுக்க வேண்டும். யாருக்கும் தெளிவில்லாத படம் பிடிக்காது. இதற்கு காரணம் நடுங்கும் கை அல்லது சரியாக முறைப்படுத்தப்படாத ஷட்டர் வேகம். எப்பொழுதும் இரண்டு கைகளை கொண்டு கேமராவை பிடிக்க வேண்டும். ஷட்டர் பொத்தானை பாதி கீழே விழும்படி பிடிக்க வேண்டும். பின்பு மெதுவாக ஷட்டர் பொத்தானை மெதுவாக ரிலீஸ் செய்யவும். நகரும் படத்தை எடுக்க sport scene ஆப்ஷனை பயன்படுத்தவும். 

Djmod6L.jpg

கம்போசிஷன்

Rule of thirdsஐ தவிர கோணங்கள் மற்றும் சமச்சீர் composition முக்கியத்துவம் இருக்கின்றது. சரியான கோணத்துடன் போட்டோவை எடுப்பதால் போட்டோவை துல்லியமாக எடுக்க முடியும். அதனால் தான் செல்ஃபீஸ் எப்பொழுதும் மேலிருந்து எடுக்கப்படுகின்றது. 

TDAhwHL.jpg

எப்பொழுது, எப்படி HDR மோட் பயன்படுத்தப்பட வேண்டும்

HDR மோடை எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தால் அழகான படம் எடுக்க முடியும். ஏன் என்றால் இதில் ஒரே படத்தை பல காப்பிகளில் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆகவே சரியான முறையில் இதை பயன்படுத்தினால் பிரகாசமான துல்லியமான படத்தை எடுக்க முடியும். 

KZGGVSo.jpg

எடிட்டிங்

கருவிகள் சில சூழ்நிலையில் உங்கள் போன் கேமரா எடுக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் போட்டோ capturing மற்றும் எடிட்டிங் ஆப்ஷன் செல்லவும். இதில் உள்ள Pro HDR, ProCapture Free, Camera FV-5 & Snapseed நீங்கள் அழகான போட்டோ எடுக்க உதவும்.

WQVwXRc.jpg

லென்ஸை சுத்தம் செய்யவும்

கேமராவின் லென்ஸில் தூசி இருந்தாலும் போட்டோ அழகாக வராது. ஆகவே போட்டோ எடுக்கும் முன்பு லென்ஸ் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்த்து பின்பு போட்டோ எடுக்கவும். 

Dv80sxx.jpg

லேண்ட்ஸ்கேப் வகை போட்டோ பயன்படுத்தவும்

Portrait மோடில் போட்டோ எடுப்பதை விட லேண்ட்ஸ்கேப் வகை புகைப்படம் தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். இதன் widescreen revolution துணையாக இருக்கும். நம் கண்கள் லேண்ட்ஸ்கேப் வகை காட்சிகள் பார்க்க பழகி இருக்கின்றன. ஆகவே சில காரணங்களுக்காக எப்பொழுதும் லேண்ட்ஸ்கேப் வகை புகைப்படங்களை எடுக்கலாம்.

cyAuVU9.jpg

Monochrome

கலர் புகைப்படங்கள் வந்த காரணத்தால் கருப்பு வெள்ளை படங்களை நாம் மறந்தே விட்டோம். இந்த கேமராவில் உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஆப் filter உதவியுடன் கருப்பு வெள்ளை படங்களை எடுக்க முடியும். இதை போட்டோ எடுக்க தெரியாதவர்கள் கூட எடுக்க முடியும். 


cyAuVU9.jpg Dv80sxx.jpg    Djmod6L.jpg 9DHGjVD.jpg   

Sunday 13 March 2016

பிரேஸ்லெட் கம்ப்யூட்டர் தயாரிக்கும் சோனி நிறுவனம்.!

இண்டர்நெட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மொபைல் கருவிகள் துவங்கி இதர கருவிகளும் இண்டர்நெட் இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் இண்டர்நெட் தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். 

DPQfqNe.jpg

இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் பிரேஸ்லெட் கம்ப்யூட்டர். ஓஎல்இடி திரையை பயன்படுத்தி சோனி நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று கான்செப்ட் வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த கம்ப்யூட்டர் வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Blt4PRT.jpg

ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் என இரண்டையும் ஒரே கருவியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரேஸ்லெட் கம்ப்யூட்டரின் அழகிய புகைப்படங்களை இங்கு பாருங்கள்.. 

fqxkeHU.jpg

வளையும் ஓஎல்இடி திரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

RwFF8my.jpg

இழுக்கும் வடிவில் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.

5AAt5pH.jpg

பல்வேறு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

06jSgGN.jpg

ப்ரோஜக்டர் வழங்கப்பட்டுள்ளது. 

j2USvWF.jpg

ஹோலோகிராம் ப்ரோஜக்டரை திரை போன்று பயன்படுத்த முடியும். 

oerN21U.jpg

ஹோலோகிராம் ப்ரோஜக்டர் 

DPQfqNe.jpg
Blt4PRT.jpgfqxkeHU.jpgRwFF8my.jpg5AAt5pH.jpg06jSgGN.jpgj2USvWF.jpg
oerN21U.jpg

ஏலியன்கள் அனுப்பிய அல்ல அனுப்பிக் கொண்டே இருக்கும் தகவல்கள்..!

அளந்து பார்க்க முடியாத மாபெரும் அண்டத்தில், பூமி கிரகத்தில் மட்டும் தான் உயிரினம் வாழ்கின்றது, வேறு எந்த வேற்று கிரகத்திலும் எந்த விதமான உயிரினமும் இல்லவே இல்லை என்பதற்கு எந்த விதமான அதிகாரப் பூர்வமான சான்றும் இல்லை. இது தான் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று நம்புபவர்களின் அடிப்படை கொள்கை ஆகும்..! 

அந்த அடிப்படைக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் பல ஆதரங்கள் அனுதினமும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அவைகளில் சில மிகவும் பலமான ஆதாரமாக இருக்கும், அதிலும் உலகின் சிறந்த அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் எடுத்துரைக்கும் ஆதரங்கள் 'ஒரு முறைக்கு இரு முறை' யோசிக்க தூண்டுகிறது என்பது தான் நிதர்சனம். அப்படியான ஒரு ஆதாரங்களில் ஒன்று தான் ஏலியன்களின் அனுப்பிய, ஒருவேளை அனுப்பிக் கொண்டே இருக்கும் தகவல்கள்..! 

t7ggJLC.jpg

சர்ச்சை : 

உலக நாடுகளுக்கு மத்தியில் அடிக்கடி மாபெரும் சர்ச்சைகளை கிளப்பும் எட்வார்ட் ஸ்னோடன் தற்போது ஏலியன்கள் அனுப்பிய மெஸேஜ்கள் பற்றிய சர்ச்சை ஒன்றை கிளப்பி உள்ளார். 

quehff1.jpg

தகவல் : 

எட்வார்ட் ஸ்னோடன், அமெரிக்காவின் என்எஸ்ஏ (NSA) சார்ந்த ரகசிய தகவல்களை அவ்வப்போது வெளியிடுபவர். தேசிய பாதுகாப்பு அமைப்பு (National Security Agency - NSA) என்பது அமெரிக்காவின் சமிக்கைப் புலனாய்வு அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

g4Vf1nd.jpg

சந்திப்பு :

எட்வார்ட் ஸ்னோடன், அண்டவெளி இயற்பியல் அறிவியலாளரான நெயில் டிகிராஸ்ஸி டைசன் உடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அந்த சந்திப்பில் ஏலியன்கள் நமக்கு கண்டிப்பாக மெஸேஜ்கள் அனுப்பி இருக்கும் ஆனால் அவைகளை நம்மால் கண்டுபிடிக்கவோ,புரிந்து கொள்ளவோ முடிவதில்லை என்று கூறியுள்ளார்.

Tz2lq7H.jpg

காரணம் : 

மேலும் ஏலியன் மெஸேஜ்கள் புரிந்து கொள்ளப்பட முடியாததற்க்கு காரணம் அந்த தகவல்கள் எல்லாம் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) தகவல்கள் என்றும் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். 

LD8uaq1.jpg

இரகசிய மொழி :

பல விதமான அதிநவீன முயற்சிகளை மேற்க்கொள்வதை விட, ஏலியன்கன் இரகசிய மொழியில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தாலே வேற்றுகிரக வாசம் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்ள முடியும் என்கிறார் ஸ்னோடன்.

Cnc56wG.jpg

டிகோட் :

மேலும் அந்த மெஸேஜ்களை டிகோட் (Decode) செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். ஏனெனில் ஏலியன்கள் மிகவும் புத்திசாலிகள் அண்டத்தில் பிற உயிரினங்கள் இருப்பதை அறிந்து தான் அவைகள் மறைகுறியாக்கப்பட்ட மெஸேஜ்களை பரிமாறிக் கொள்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

zshOkmX.jpg

தொடர்பு : 

அது மட்டுமின்றி ஏலியன்கள் பூமி கிரகத்தோடு தொடர்பு கொள்ள நினைத்தாலும், அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் மனித இனம் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். 

DvGIPwP.jpg

பாதுகாப்பு : 

பூமியில் இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சம் வேற்று கிரகத்திலும் உண்டு என்பதை நம்புகிறீர்களா என்ற டைசனின் கேள்விக்கு "இருக்கலாம்" என்று ஸ்னோடன் பதில் கூறியுள்ளார். செயற்கை கோள்கள் மூலம் நாம் அனைத்தையும் கண்காணிக்கின்றோம் என்று நினைப்பது முற்றிலும் தவறு என்றும் ஸ்னோடன் கருத்து தெரிவித்து உள்ளார்.

ttksIMA.jpg

ஏலியன் தேடல் : 

மேலும் ஏலியன் சார்ந்த ஆய்வில் ஈடுபடும் டாக்டர் நாதெல்லே காப்ரோவும் ஏலியன் தேடல் சார்ந்த தன் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

ViYiINU.jpg

வளர்ச்சி :

நம்மை 1000 வருடங்கள் பழமை வாய்ந்த நாகரீகத்தை ஏலியன்கள் கொண்டிருந்தால் அவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று கூறியுள்ளார் டாக்டர் நாதெல்லே காப்ரோ. 

gEvghK8.jpg

நிலை : 

ஏலியன்களின் தொடர்பு முறை என்ன, அதன் வளர்ச்சி நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் தான் அவர்களை அடைய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இதுவரை நமக்கு தெரிந்த தொடர்பு முறையில் தான் வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள விரும்பி தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம், அவர்களுக்கு தெரிந்த முறை என்ன என்பது எப்போதும் புதிர் தான் என்றும் அவர் கூறியுள்ளார்..!

8igfgPz.jpg

இதுவரை : 

வாவ் சிக்னல் (Wow Signal) மட்டும் தான் இதுவரை கிடைத்த ஏலியன் சிக்னல்களிலேயே மிகவும் தெளிவான சிக்னல் என்பது குறிப்பிடத்தக்கது..! 

Ch1ac4x.jpg

சிக்னல் :

ஏலியன் சார்ந்த தேடல் ஆனது முழுக்க முழுக்க ரேடியோ மற்றும் ஆப்டிக்கல் சிக்னல்களில் தான் பெரும்பாலும் அடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

RxmJOhc.jpg

கானல் நீர் : 

அப்படியாக ஏலியன்களின் மெஸேஜ்களையும் சிக்னல்களையும் புரிந்து கொள்ள முடியாத வரை வேற்றுகிரக வாசம் என்பது வெறும் கானல் நீர் தான் என்பது ஆராய்ச்சியாளர்களின் குத்தாகும்.


kC4TnHm.jpg